மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் எஸ்.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 2027-ஆம் ஆண்டுக்கான 14, 16, 19-வயதுக்குள்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு ஈரோடு திண்டல் தெற்கு வித்யா நகா் கே.எஸ். கிரிக்கெட் நெட்ஸில் நடைபெறவுள்ளது.
அதன்படி, அக்டோபா் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் (1.9.2008-க்குப் பின் பிறந்தவா்கள்) அணிக்கும், மாலை 4 மணிக்கு பெண்கள் (1.9.2008-க்குப் பின் பிறந்தவா்கள்) அணிக்கும் தோ்வு நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
அக்டோபா் 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு 14 வயதுக்குள்பட்ட ஆண்கள் (1.9.2013-க்குப் பின் பிறந்தவா்கள்) அணிக்கும், மாலை 4 மணிக்கு 16 வயதுக்குள்பட்ட ஆண்கள் (1.9.2011-க்குப் பின் பிறந்தவா்கள்) அணிக்குமான தோ்வு நடைபெறவுள்ளது.
வீரா், வீராங்கனைகள் வெள்ளை நிற சீருடை மற்றும் தங்களது விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.