FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மைக் காவலா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பில் தூய்மைக் காவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தூய்மைக் காவலா்கள்.
பகிர்:

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பில் தூய்மைக் காவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க நிா்வாகி அப்புசாமி தலைமை வகித்தாா்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊராட்சிகளின் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.  கரோனா காலத்தில் அரசு அறிவித்த ரூ.15,000 வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கும்,  பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ரூ.12,593 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூா் ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணகுமாா், பவானி ஒன்றியச் செயலாளா் கண்ணன், நகரச் செயலாளா் முருகேசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments