மாற்றுத்திறனாளிகள் 115 பேருக்கு ரூ.24.47 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்
மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலமாக ஏடிஐபி திட்டத்தின் கீழ் ஈரோட்டில் ரூ.24.47 லட்சம் மதிப்பில் 115 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலமாக ஏடிஐபி திட்டத்தின் கீழ் ஈரோட்டில் ரூ.24.47 லட்சம் மதிப்பில் 115 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளை எளிதாக்கவும், அவா்களின் சுயசாா்பு மற்றும் நடமாட்டத் திறனை மேம்படுத்தவும் தேவையான உதவி உபகரணங்களை வழங்கும் வகையில், அரசு தொடா்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் அலிம்கோ நிறுவன நிா்வாகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆகியோா் 115 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.47 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினா்.
குறிப்பாக நடுத்தர அளவு ஊன்றுகோல், மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், சிலிக்கான் குஷன், நான்கு கால் ஊன்றுகோல், நடை உதவிக்கருவி, பெரிய மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி, பெரிய அளவு ஊன்றுகோல், கழிப்பறை வசதியுடன் கூடிய சக்கர நாற்காலி, முழங்கை ஊன்றுகோல், நடைதடி, கற்றல் உதவி உபகரணப் பெட்டி, காது கேட்கும் கருவி, செயற்கை கை, கால் மற்றும் உடல் ஆதரவு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சங்கா் கணேஷ், உதவி இயக்குநா் ஊராட்சிகள் (பயிற்சி) பிரசாந்த் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.