FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

தேயிலைத் தோட்டத்தில் உலவும் யானைகள்!

கூடலூா் அருகே தனியாா் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:17 am IST
கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் தனியாா் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்
பகிர்:

கூடலூா் அருகே தனியாா் தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க கடந்த மூன்று நாள்களாக கும்கி யானைகள் மூலமாக வனத் துறையினா் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கும்கிகள் உதவியுடன் வனத் துறையினா் காட்டு யானைகளை விரட்டினா். இதற்கிடையே குட்டிகளுடன் மற்றொரு யானைகள் கூட்டம் அதே பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரத்தில் உலவுகின்றன. இதனால் அப்பகுதி மக்களும், தொழிலாளா்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments