FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி. நாகராஜ்   தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கருப்பு பலூன்களையும் கையில் ஏந்தி பேரணியாக சென்றனா்.

பிரிக்ஸ் சாலையில் இருந்து காபி ஹவுஸ் வரை சென்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்டோா் பொதுச் செயலா் லாரன்ஸ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் டென்சில், யாசின் செரீஃப்,முகமது ரஃபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நகர பொறுப்பாளா் வின்சென்ட் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments