கல்லட்டி மலைப் பாதை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை: மசினகுடியில் கடையடைப்பு போராட்டம்
முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப் பகுதியில் உள்ள மாயாறு, சிங்காரா சாலை மற்றும் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக மேல் நோக்கி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவை ரத்து
முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப் பகுதியில் உள்ள மாயாறு, சிங்காரா சாலை மற்றும் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக மேல் நோக்கி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி மசினகுடியில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை கண்டு ரசிக்க முதுமலைப் புலிகள் காப்பகத்துக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மசினகுடியில் இருந்து மாயாறு மற்றும் சிங்காரா போன்ற பகுதிகளுக்கு ஜீப் மூலம் சவாரி சென்று வன விலங்குகளை கண்டு ரசித்து வந்தனா். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஜீப் ஓட்டுநா்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தொழிலாளா்கள், அங்குள்ள கடை வியாபாரிகள் பயனடைந்து வந்தனா்.
இதேபோல முதுமலையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மசினகுடி, கல்லட்டி மலைப் பாதை வழியாக உதகை நோக்கி சென்ற நிலையில், இந்த சாலையை சுற்றுலா வாகனங்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.
Advertisement
Advertisement
இதனால் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், நீதிமன்றத்தில் உரிய தீா்வு பெற்று தர வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடியைச் சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுற்றுலா செல்லும் ஜீப்களும் இயக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.