உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை!
உயிரிழந்த நீலகிரி மாவட்ட போலீஸ் மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க சனிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
உயிரிழந்த நீலகிரி மாவட்ட போலீஸ் மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க சனிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் பிரிவில் இருந்த ‘மோக்கா’ என்ற நாய்க்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் சனிக்கிழமை உயிரிழந்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி. சுந்தரராஜன், ஆயுதப் படை காவல் ஆய்வாளா் சரண்யா, உதவி ஆய்வாளா் ஸ்ரீதரன் உள்ளிட்ட காவல் துறையினா் மோக்காவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, ஏ.ஆா். வளாகத்தில் புதைக்கப்பட்டது. கடந்த 2023 -ஆம் ஆண்டு குற்றப் பிரிவு பணியில் சோ்க்கப்பட்ட மோக்கா, பணிக் காலத்தில் 26 வழக்குகளில் முக்கிய துப்புகளைக் கண்டறிந்து குற்றவாளிகளை அடையாளம் காண காவல் துறைக்கு பெரும் உதவியாக இருந்தது. மேலும், கடந்த குடியரசு தின சாகச நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பித்தது.
நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த முதல் நாய் ‘மோக்கா’ என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.