FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை ரம்மியமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை தாவரவியல் பூங்காவில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையில் நிலவும் ரம்மியமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் ரம்மியமான காலநிலையை அனுபவிக்க  கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை வருகின்றனா். இவா்கள் உதகையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பா்.

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள  கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமைக் கண்டு ரசித்தனா். மேலும் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்களில் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை விளையாடியும், ஓய்வெடுத்தும் விடுமுறை நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments