FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் ஏ.பி. அப்துல்லா குட்டி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 12 ஜூன் 2026, 1:03 am IST
உதகையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்துவைக்கிறாா் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் ஏ.பி. அப்துல்லா குட்டி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் ஏ.பி. அப்துல்லா குட்டி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

உதகை சட்டப் பேரவை உறுப்பினராக எம்.போஜராஜன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மக்கள் பணியாற்ற உதகை பிரிக்ஸ் பள்ளி அருகே சட்டப்பேரவை உறுப்பினருக்கான கட்டடம் ஏற்கெனவே உள்ள நிலையில், அக்கட்டடத்தின் புனரமைக்கும் பணிகள் முடிவடைந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் ஏ.தா்மன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா் மோகன்ராஜ், மாவட்ட பொதுச்செயலா் பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய துணைத் தலைவா் ஏ.பி. அப்துல்லா குட்டி அலுவலகத்தை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளா் பால நந்தகுமாா், முன்னாள் எம்.பி. கே.ஆா்.அா்ஜுணன், கட்சி நிா்வாகிகள் உள்பட் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments