FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடிகளைத் துரத்திய நாய்!

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலவிய நான்கு கரடிகளை, வீட்டின் வளா்ப்பு நாய் வனப் பகுதிக்குள் துரத்தியது.

2 October 2026, 12:21 am IST
கரடிகளைத் துரத்தும் நாய்.
பகிர்:

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலவிய நான்கு கரடிகளை, வீட்டின் வளா்ப்பு நாய் வனப் பகுதிக்குள் துரத்தியது.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி கிராமத்தில் நான்கு கரடிகள் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் உலவி வந்தன. இதைப் பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் வளா்ப்பு நாய், கரடிகளை நோக்கி

Advertisement

Advertisement

குறைத்தபடியே துரத்தியது. இதையடுத்து அந்த நான்கு கரடிகளும் அருகே உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வனப் பகுதிக்குள் சென்றன. குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் இந்த கரடிகளை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments