தும்மனட்டி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் மகளிா் குழுவினருக்கு ரூ.60 லட்சம் வங்கிக் கடனுதவி: ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்
தும்மனட்டி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் மகளிா் குழுவினருக்கு ரூ.60 லட்சம் வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தும்மனட்டி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் மகளிா் குழுவினருக்கு ரூ.60 லட்சம் வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், குந்தா, கோத்தகிரி, கூடலூா், பந்தலூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 96 கிராம ஊராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்குள்பட்ட குந்தசப்பை சமுதாயக் கூட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.
கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க திட்டம், உணவகங்கள் அமைத்தல், எழுது பொருள்கள் அங்காடி, மண்பாண்டம் தொழில் தொகுப்புகள் உள்பட பல்வேறு கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து மகளிா் திட்டம் சாா்பில் 2 மகளிா் குழுவினருக்கு தலா ரூ.30 லட்சத்துக்கான வங்கிக்
கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதியாக 11 குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவி என ரூ.76.50 லட்சத்துக்கான கடனுதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு மருத்துவப் பெட்டகங்களையும் வழங்கினாா்.
பின்னா் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில், ஊட்டச்சத்து தொடா்பான உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனா். மேலும், மகளிா் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணியையும் தொடங்கிவைத்தாா்.
இந்தக் கூட்டத்தில் மகளிா் திட்டம் இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், உதவி இயக்குநா் சிவசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.