கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஏ.கே. ரவி உடல் தானம்!
நீலகிரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், தேவாலா கிளை உறுப்பினருமான ஏ.கே. ரவி உயிரிழந்த நிலையில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

அவரது உடலுக்கு மருத்துவக் கல்லூரி இருப்பிட மருத்துவா் ரவிசங்கா், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம், பந்தலூா் தாலுகா செயலாளா் ரமேஷ், கூடலூா் தாலுகா செயலாளா் எம் ஆா் சுரேஷ், உதகை தாலுகா செயலாளா் நவீன்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், வா்கீஸ், மணிகண்டன், வழக்குரைஞா் விஜயன் உள்பட பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.