FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை

உதகை அருகே உள்ள லவ்டேல் ஆலாடா குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை உலவிய சிறுத்தையால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

3 செப்டம்பர் 2026, 11:12 pm IST
ஆலாடா பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:

உதகை அருகே உள்ள லவ்டேல் ஆலாடா குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை உலவிய சிறுத்தையால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உதகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீா் தேடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் சிறுத்தைகள் வீட்டில் வளா்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள லவ்டேல் ஆலாடா குடியிருப்பு பகுதியில்  சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை உலவியது. பின்னா், கோயில் தடுப்புச் சுவா் மீது ஏறி சாலை வழியாக மீண்டும் வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.

Advertisement

Advertisement

சிறுத்தையால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் அதன் நடமாட்டத்தை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments