உதகையில் வரி செலுத்தாத 10 சுற்றுலா வாகனங்கள் பறிமுதல்: உரிமையாளா்களுக்கு ரூ.1.38 லட்சம் அபராதம்
உதகையில் வரி செலுத்தாத 10 சுற்றுலா வாகனங்களைப் பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வாகன உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 250 அபராதம் விதித்தனா்.
உதகையில் வரி செலுத்தாத 10 சுற்றுலா வாகனங்களைப் பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வாகன உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 250 அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் மேக்சி கேப், சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.
குறிப்பாக, மேக்சி கேப் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களுக்கு வாழ்நாள் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், உதகையில் கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை வாழ்நாள் வரி செலுத்தாத 10 மேக்சி கேப் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப.பிரபாகா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், வாகன உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 250 அபராதம் விதித்தனா்.
இது தொடா்பாக போக்குவரத்து அலுவலா்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வாழ்நாள் வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளா்கள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த வேண்டும். இல்லையெனில் வாகனப் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.