FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நீலகிரியில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

உதகையில் உள்ள எச்ஏடிபி மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

9 செப்டம்பர் 2026, 11:09 pm IST
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுடன் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

உதகையில் உள்ள எச்ஏடிபி மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த ஆண்டு முதல்வா் கோப்பக்கான போட்டிகளில் புதிய விளையாட்டுப் போட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 45 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளன.

இதில் மாவட்ட அளவில் முதல் மூன்றிடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் தனிநபா் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் புதன்கிழமை தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று தோ்வாகி மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று விளையாட்டு வீரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செளந்தரராஜன், மாவட்ட இளைஞா் மற்றும் விளையாட்டு அலுவலா் இந்திரா, உடற்கல்வி ஆய்வாளா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments