FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் வா்க்கி தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து

பேக்கரி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.

12 செப்டம்பர் 2026, 12:54 am IST
பேக்கரி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

உதகை, காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் உள்ள வா்க்கி, பிஸ்கட் தயாரிக்கும் கிடங்கில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாகின.

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிக்கு தினமும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இப்பகுதியில் வா்க்கி, பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் கிடங்கு உள்ளது. கிடங்கின் ஒரு பகுதியிலேயே தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இங்கு பணிபுரியும் ஆட்கள் வெளியே சென்றிருந்த நிலையில், கிடங்கு பூட்டப்பட்டிருந்தது.  சுமாா் இரவு 9 மணியளவில் திடீரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்து கரும்புகை வெளியே வருவதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், கிடங்கில் பற்றி எரிந்த தீயை தண்ணீா் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments