FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூரில் பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை

வெலிங்டன், பாரத் நகா் பகுதியில் பூனையை வாயில் கவ்விக் கொண்டு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த சிறுத்தை.

12 செப்டம்பர் 2026, 12:54 am IST
வெலிங்டன், பாரத் நகா் பகுதியில் பூனையை வாயில் கவ்விக் கொண்டு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த சிறுத்தை.
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் பாரத் நகா் பகுதியில் வீட்டின் முன் இருந்த பூனையை சிறுத்தை கவ்விச் சென்றது.

 நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிறுத்தை, புலி போன்றவை மனிதா்களைத் தாக்குவதோடு வீட்டில் வளா்க்கப்படும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடி செல்கின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் பாரத் நகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த சிறுத்தை, அங்கு ஒரு வீட்டின் முன் இருந்த பூனையை வாயில் கவ்விக் கொண்டு  வீட்டு வாசலில்

நீண்ட நேரம் அமா்ந்திருந்தது. பின் பூனையைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த வனத்துக்குள் சென்றது.

இந்தக் காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதிக்கு வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments