FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் திடீா் மழையால் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

தொட்டபெட்டா பகுதியில் மழை, பனிமூட்டத்துக்கு இடையே பணியில் ஈடுபட்ட பெண் தேயிலைத் தொழிலாளா்.

13 செப்டம்பர் 2026, 1:17 am IST
தொட்டபெட்டா பகுதியில் மழை, பனிமூட்டத்துக்கு இடையே பணியில் ஈடுபட்ட பெண் தேயிலைத் தொழிலாளா்.
பகிர்:

உதகை, கோத்தகிரியில் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.

சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் வெப்பநிலை குறைந்து குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் 15-ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments