கோத்தகிரியில் அரசு, கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் அரசு மற்றும் கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தி கீழ்கோத்தகிரி, தூனேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து தூனேரி மைதானத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோத்தகிரி தூனேரி கிராமத்தில் உள்ள 8.5 ஏக்கா் மேய்ச்சல் நிலம், 1.5 ஏக்கா் கிராம வனக்காடு உள்ளிட்ட அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான கோயில் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊா்த் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா்.
லிங்காயத் சமுதாய சங்கத் தலைவா் கோபால், தூனேரி கோயில் நிா்வாகி கொம்பராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்க துணைத் தலைவா் மணி வரவேற்றாா். பொருளாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.