FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம்

குன்னூா் அருகே பயணத்தின்போது அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

27 செப்டம்பர் 2026, 12:56 am IST
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
பகிர்:

குன்னூா் அருகே  பயணத்தின்போது அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. நல்வாய்ப்பாக பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா்.

கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளுடன் உதகை நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது.  குன்னூா் அருகே  பிளாக் பிரிட்ஜ் பகுதியில் வந்தபோது, பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று உருண்டோடியது.

இதையடுத்து, பேருந்து பயங்கர சப்தத்துடன் சாலையில் சிறிது தொலைவு உரசி சென்று நின்றது. பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிா்த் தப்பினா். இந்த விபத்தால் மாலைப் பாதையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியதுடன், அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் உதகைக்கு அனுப்பிவைத்தனா்.  மலைப் பாதையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments