அவிநாசியில் ரூ.7.32 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 7.32 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 7.32 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 383 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5, 500 முதல் ரூ.6,030 வரையிலும், கொட்டுரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7.32 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஏலத்தில், அந்தியூர், பூதப்பாடி, திருப்பத்தூர், அரூர், தருமபுரி, பென்னாகரம், கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர், குன்னத்தூர், ஆகிய பகுதிகளிலிருந்து 59 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 4 வியாபாரிகளும் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.