FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உடுமலை அருகே தென்னந் தோப்புகளில் புகுந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் பீதி

உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையடிவாரக் கிராமங்களில் தென்னந் தோப்புகளுக்குள்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையடிவாரக் கிராமங்களில் தென்னந் தோப்புகளுக்குள் புகுந்த யானைக் கூட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர். 
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உடுமலை, அமராவதி வன எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள யானைகள் குடிநீர் தேவைகளுக்காக  அடர்ந்த வனப் பகுதிகளை விட்டு பல கிலோ மீட்டர் தொலைவு கடந்து வெளியே வந்து செல்கின்றன.  அப்படி வரும்போது யானைகள் கூட்டம் தங்களது வழித்தடங்களை மாற்றிக் கொண்டு மலையடி வார கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில், உடுமலை அருகேயுள்ள கரட்டூர், வளையபாளையம் உள்ளிட்ட மலையடி வாரக் கிராமங்களுக்குள் உள்ள தென்னந்தோப்புகளுக்கு யானைகள் கூட்டமாக செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தன. 
தென்னை மரத்தில் உள்ள குருத்துகளை பிடுங்கிய இந்த யானைக் கூட்டங்கள் இரவு முழுவதும் அதை தின்றுகொண்டிருந்தன. இதனால் அங்குள்ள விவசாயிகள்  பீதி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை கூறியதாவது:
இப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு வந்த யானைகள் சுமார் 60  தென்னை மரங்கள் மற்றும் கன்றுகளை சேதப்படுத்தின. கூட்டமாக வந்த யானைகள் விடிய விடிய தென்னந்தோப்புகளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன. யானைகளை மீண்டும் வனத்துக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
உடுமலை வனத் துறையினர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக மலையடிவாரக் கிராமத்துக்குள் புகுந்த யானைகளை விரட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments