கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
பல்லடத்தில் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தில் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏசையன், வட்ட செயலாளர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் வட்டத் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். இதில், மாநில துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.
இக்கூட்டத்தில், அக்டோபர்
6 ஆம் தேதி காங்கயத்தில் முப்பெரும் விழா நடத்துவது, கிராம உதவியாளர்களை மாவட்ட, வட்ட நிர்வாக அலுவலகங்களில் மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.