FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது.

23 செப்டம்பர் 2026, 3:23 am IST
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசிமணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்த நிலையில், மாலையில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் செந்நிறமாக நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு 11-ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments