FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14)நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) காலை 10.30 மணிக்கு நடைபெறும். 
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.  
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரையிலும்,  ஐ.டி.ஐ.,  டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.   
இந்த முகாமுக்கு வரும்போது தங்களது வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் இருந்தால்,  அதையும் சரிசெய்தல் மற்றும் புதுப்பித்து கொள்ளலாம்; கூடுதல் கல்வித் தகுதிகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.  
தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். 
தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும் தங்கள் வருகையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments