FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பூர் மாநகராட்சியில் வரி செலுத்த இணையதள சேவை

மாநகராட்சியின் வரியினங்கள் செலுத்தும் இணையதள சேவை அறிமுகக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மாநகராட்சியின் வரியினங்கள் செலுத்தும் இணையதள சேவை அறிமுகக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி நல அலுவலர் மரு.பூபதி  பேசியதாவது :
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சொத்துவரி , குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை இணையதளம் மூலம் எளிதில் செலுத்தி புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் வரிசெலுத்துவோர் சேவை வரியில்லாமல் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். 
இதையடுத்து உதவி ஆணையர்(கணக்கு) சந்தானநாராயணன் இந்த இணையதள சேவை பற்றிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி திட்ட அமைப்பாளர் செளதாமணி, வருவாய்க் கண்காணிப்பாளர் தங்கவேல்ராஜன்,  சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சண்முக வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments