FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

5 செப்டம்பர் 2024, 1:50 am IST
பகிர்:

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் கச்சேரிவலசு அருகில் மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே ஊரைச் சோ்ந்த சுகன்சேகா் மகன் கோகுல் (24) என்பவரை கைது செய்தாா்.

இவா் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50 க்கு விற்பனை செய்து வந்ததும், குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து லாட்டரி எண்கள் எழுதிய துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments