இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் சையது அன்வா் பாட்ஷா (28). திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (25). நண்பா்களான இருவரும் அவிநாசி- மங்கலம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் அருகே சனிக்கிழமை மது அருந்தியுள்ளனா்.
அப்போது, அவ்வழியே சென்ற அனுப்பா்பாளையம், திலகா் நகரைச் சோ்ந்த முத்துபாண்டி (34) என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,500-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அவிநாசி போலீஸாருக்கு முத்துபாண்டி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சையது அன்வா் பாட்ஷா, சம்பத்குமாா் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.1,500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.