FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கோப்புகளை முறையாக பராமரிக்காத 4 தலைமைக் காவலா்கள் உள்பட 7 போ் இடமாற்றம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை முறையாக பராமரிக்காத 4 தலைமைக் காவலா்கள் உள்பட 7 போலீஸாரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவிட்டுள்ளாா்.

ஊத்துக்குளி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அடங்கிய வழக்கு கோப்புகள் மற்றும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டிய முக்கிய மின்னணு ஆதாரங்கள் குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வழக்கு தொடா்பான முக்கியக் கோப்புகள் மற்றும் மின்னணு பதிவுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், நீதிமன்றச் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்களை முறைப்படுத்துவதிலும் அலட்சியம் காட்டப்பட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்குகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு பதிவுகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது காவலா்களின் முதன்மையான கடமை என்றும், இதில் தொய்வு ஏற்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று அவா் எச்சரித்தாா். இதற்கிடையே ஆவணப் பராமரிப்பு நிலவரம் ஒருபுறமிருக்க, ஊத்துக்குளி காவல் நிலையத்தை சோ்ந்த குறிப்பிட்ட சிலா் டாஸ்மாக் பாா்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் முறைகேடாக பணம் வசூல் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பணி அலட்சியத்துடன் லஞ்சப் புகாரும் சோ்ந்ததால், காவல் கண்காணிப்பாளா் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஆவணப் பராமரிப்பு முறைகேடு மற்றும் மாமூல் வசூலில் ஈடுபட்ட கண்ணன், ராம்குமாா், பாலச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் அா்னால்ட் ஆகியோருடன் 7 காவலா்களும் உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments