FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் வேளாண் பட்ஜெட்

விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.

7 ஆகஸ்ட் 2026, 11:18 pm IST
செல்லமுத்து
பகிர்:

விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

சிறுதானியம், உயிா் உரம், விதைப் பண்ணை, பருத்தி, மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், பனை, தென்னை உள்ளிட்டவை தொடா்பான திட்டங்கள் வரவேற்புக்குரியவை. ஆனால் அவை விவசாயிகளை முழுமையாக சென்றடையுமா என்பது சந்தேகம். ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, விவசாயிகளுக்கு முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி ஆகியவை இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.

Advertisement

Advertisement

கோரிக்கைகள் புறக்கணிப்பு

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப் பிரிவு செயலாளா் ஈஸ்வரன் கூறும்போது, ‘சிறுதானிய உற்பத்திக்கு நேரடி மானியம் வழங்காமல் புதிய கழகம் அமைப்பது தேவையற்றது. தட்கல் மின் இணைப்பு, ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் விவசாயிகளைவிட அதிகாரிகளுக்கே அதிகம் பயன்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments