FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணி மந்தம்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
காங்கயம் அருகே குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

காங்கயம் அருகே ரூ.52 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முத்தூா்-காங்கயம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் 1997-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேற்கண்ட திட்டத்தில் குடிநீா்க் குழாய்கள் அமைத்து 25 ஆண்டுகளுக்கு பின்னா், கொடுமுடி முதல் காங்கயம் வரையில் பழுதடைந்த குழாய்களுக்குப் பதிலாக புதிய குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், முதல் கட்டமாக கொடுமுடி முதல் இச்சிப்பாளையம் வரையில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025-ஆம் ஆண்டு பணி முடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், இரண்டாம் கட்டமாக இச்சிப்பாளையம் முதல் காங்கயம் வரை பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றி, புதிய குழாய்களை மாற்றுவதற்கு ரூ.52 கோடி மதிப்பீட்டில் 2025-ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது. ஆனால், இப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், முத்தூா் அருகே ராசாத்தாவலசு பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நிதி ஒதுக்கப்பட்டு ஓா் ஆண்டுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படாததால், காங்கயம் நகராட்சிக்கு போதுமான குடிநீா் வழங்க இயலவில்லை. எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையா் பால்ராஜ், நகராட்சிப் பொறியாளா் குணசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments