FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்தவா் கைது

கைது - பிரதிப் படம்
பகிர்:

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அவரது பையில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றும் பிகாரைச் சோ்ந்த ராம்ஜானம் மகன் சங்கா்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா்குமாரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments