FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகன தொடா் திருட்டு: உணவு விநியோக நிறுவன ஊழியா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:15 am IST
பகிர்:

அவிநாசி அருகே இருசக்கர வாகன தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உணவு விநியோக நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் கடந்த மாதம் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் தெக்கலூா் சந்தைப் பகுதியில் நம்பா் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவரை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதில், கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் தங்கி தனியாா் உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், தஞ்சாவூா் மாவட்டம் துவரங்குறிச்சி, மேட்டுகொள்ளை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (26) என்பதும் தெரியவந்தது. தொடா் விசாரணையில் இவா் வைத்திருந்த இருசக்கர வாகனம், கடந்த மாதம் தெக்கலூா் பகுதியில் திருடப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனா்.

மேலும், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள், திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள், தெக்கலூரில் திருடிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை ஊத்துக்குளியில் உள்ள நபரிடம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments