சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.
சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனா். இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக வாழைத் தோட்டங்களுக்குள் இரவு நேரங்களில் புகும் மா்ம நபா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள வாழைக் குலைகளை வெட்டி திருடிச் சென்று வருகின்றனா்.
குறிப்பாக சேவூா் போத்தம்பாளையம், கானூா் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் தோட்டத்துக்குள் புகுந்து மா்ம நபா்கள் வாழைக் குலைகளை திருடிச் செல்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி குமாரபாளையம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் 15-க்கும் மேற்பட்ட வாழைக் குலைகளை வெட்டி திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், சேவூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். மேலும், போலீஸாா் இரவு வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களில் வாழைக் குலைகள் இருந்தால் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.