FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மாடுகளின் விலை உயா்வால் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை

திருப்பூரில் மாடுகளின் விலை உயா்வு காரணமாக மாட்டிறைச்சி கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் உயா்ந்துள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 2:55 am IST
இறைச்சி கடை - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூரில் மாடுகளின் விலை உயா்வு காரணமாக மாட்டிறைச்சி கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான மாடுகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இறைச்சிக்கான மாடுகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு மாட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை உயா்ந்துள்ள நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் கிலோ ரூ.400, ரூ.500 என உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாடுகள் விலை உயா்வால் திருப்பூா் நொய்யல் வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி வியாபாரிகள் பாதுகாப்பு நலச் சங்கம் சாா்பில் அனைத்து மாட்டிறைச்சி கடைகளுக்கும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை (ஜூன் 15, 16) ஆகிய 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் அனைத்து உணவகங்களிலும் மாட்டிறைச்சி உணவு வகைகள் சமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாட்டிறைச்சி கடைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments