FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஆடிப்பெருக்கு: வாழைத்தாா்கள் விலை உயா்வு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது.

2 ஆகஸ்ட் 2026, 1:09 am IST
பகிர்:

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனா். சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைத்தாா்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 550-க்கும், பச்சைநாடன் ரூ. 450-க்கும், ரஸ்தாளி ரூ. 450-க்கும், கற்பூரவள்ளி ரூ. 500-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ. 7-க்கும், செவ்வாழை ஒன்று ரூ. 10-க்கும் ஏலம் போனது. வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments