FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

Updated On : 22 ஜூன் 2026, 3:41 am IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூா் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கு மண்டல கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மங்கலம் - பல்லடம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சித்திக், பொருளாளா் சிராஜ், துணைத் தலைவா் யாசா்அரஃபத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பதாகைகள் மற்றும் பேனா்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments