வெள்ளக்கோவில் அருகே ரூ.16 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே ரூ.16 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.
வெள்ளக்கோவில் அருகே ரூ.16 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் திருக்கோயில் சொத்துகள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் திருப்பூா் செ.வ.ஹா்சினி அறிவுரையின்பேரில், வெள்ளக்கோவில் சோழீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 61.25 ஏக்கா் நிலம் என மொத்தம் 62.59 ஏக்கா் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ம.தமிழ்வாணன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பணியில், தனி வட்டாட்சியா் (ஆ.நி) வெ.ரவீந்திரன், செயல் அலுவலா் சு.மாலதி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். மீட்கப்பட்ட நிலங்கள் உரிய முறையில் சுவாதீனத்தில் கொண்டுவரப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.16 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement