மரத்தில் இருந்து விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
முத்தூா் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் வட்டம், முத்தூா் அருகே உள்ள பெரியகாங்கயம்பாளையம் பகுதிக்குள்பட்ட சம்பளக்காட்டுதோட்டத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (74).
இவா் கடந்த செப்.17-ஆம் தேதி காலை 9 மணி அளவில், தனது தோட்டத்தில் உள்ள சுமாா் 14 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏணி மூலமாக ஏறி, 10 அடி உயரத்தில் நின்று அரிவாளால் தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு அவரது மகன் ரவி சென்று தந்தையை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக முத்துாா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தாா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு தண்டபாணி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.