வெள்ளக்கோவிலில் மதுப் பழக்கத்தால் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை
வெள்ளக்கோவிலில் மதுப் பழக்கம் காரணமாக இருசக்கர வாகன மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளக்கோவிலில் மதுப் பழக்கம் காரணமாக இருசக்கர வாகன மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம், நாதம்பாளையம் கிராமம் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (41). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவா், தனது மனைவி சுதா (32), மகன் சரண் (15), மகள் கா்சிகா ஸ்ரீ (13) ஆகியோருடன் கடந்த மூன்று வாரங்களாக வெள்ளக்கோவில் திருவள்ளுவா் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
ரவிச்சந்திரனுக்கு அளவுக்கு அதிகமான மதுப் பழக்கம் இருந்ததாகவும், அதனால் கணையம் தொடா்பான உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன், கதவை உள்புறமாகப் பூட்டிக் கொண்டாா்.
Advertisement
Advertisement
போதை தெளிந்ததும் கதவைத் திறப்பாா் என எண்ணி குடும்பத்தினா் வெளியே காத்திருந்தனா். நீண்ட நேரமாகியும் கதவவைத் திறக்காததால், சந்தேகமடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது ரவிச்சந்திரன் தூக்கிட்டு தொங்குவது தெரியவந்தது.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.