FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கிய நபா் மீது வழக்கு

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கிய நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 அக்டோபர் 2026, 1:41 am IST
வழக்கு
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கிய நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள திருமங்கலம் கிராமத்தில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அங்குள்ள வீரக்குமாா் என்பவருடைய புதுக்காட்டுத் தோட்டத்தில் வெள்ளக்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் பிடித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், புள்ளநாயக்கன்பட்டி புதூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (36) என்பதும், அவா் தற்போது வெள்ளக்கோவில், எல்.கே.சி. நகா் 3-ஆவது வீதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 5 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சுரேஷுக்கு காவல் நிலைய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments