FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞா் கைது

12 அக்டோபர் 2026, 3:21 am IST
கைது
பகிர்:

அவிநாசி அருகே கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி- பழங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக 400 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (27) என்பதும், அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சதாமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments