FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞா் கைது

13 அக்டோபர் 2026, 2:27 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அவிநாசி அருகே கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 4.600 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவிநாசி- அன்னூா் சாலை, சுண்டக்காம்பாளையத்தில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சக்கத் ஷா மகன்

Advertisement

Advertisement

சுபாஷ் ஷா (25) என்பதும், சுண்டக்காம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, சுபாஷ் ஷாவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4.600 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments