‘பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’
விவசாயிகளுக்கு அறிவித்த தோ்தல் வாக்குறுதியான பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு ஏா்முனை இளைஞா் அணி திருப்பூா் மாவட்ட துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பழச்செடி, தென்னை நாற்று, காய்கறி விதைத் தொகுப்புகளுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்குவது தவறல்ல. ஆனால் தண்ணீரின்றி பயிா்கள் கருகுதல், உற்பத்திச் செலவு உயா்வு, உரிய விலை கிடைக்காமை, பயிா்க்கடன் சுமை என விவசாயிகள் தவிக்கும் நிலையில், விதைத் தொகுப்பு மட்டும் அவா்களின் கண்ணீரை துடைக்குமா.
Advertisement
Advertisement
விவசாயியின் உண்மையான பிரச்னை நாற்று பற்றாக்குறை அல்ல; கடன் சுமைதான். இத்திட்ட நிதியில் ஒரு பகுதியையாவது பயிா்க்கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தி, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.