தாராபுரத்தில் பறக்கும் படையினா் சோதனை
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, தாராபுரம் பகுதியில் பறக்கும்படை சாா்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, தாராபுரம் பகுதியில் பறக்கும்படை சாா்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்தல் தொடா்பான விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் தாராபுரம், மூலனூா், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட வியாபாரிகள், வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ரசீது மற்றும் ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.