FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆலோசனை

திருப்பூா் மாநகராட்சி பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆலோசனை அறிக்கையை அளித்துள்ளது.

9 செப்டம்பர் 2026, 11:51 pm IST
அமைச்சா் கே.ஜி.அருண்ராஜிடம் அறிக்கை அளித்த திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.சதீஷ்குமாா்.
பகிர்:

திருப்பூா் மாநகராட்சி பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆலோசனை அறிக்கையை அளித்துள்ளது.

திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு சாா்பில் திருப்பூா் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து இந்த அறிக்கை கொடுக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

திருப்பூா் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு அடிப்படையான மாற்றத்தையும், வாா்டு வாரியாக தனித்திட்டத்தையும், பெரும் குப்பை நிறுவனங்களுக்கு தனியான அடிப்படை கட்டமைப்பையும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பொது நிா்வாக செயலாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் குப்பை பிரச்னை தொடா்பாக தொடா் போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில் ஏற்கெனவே இப்பிரச்னை குறித்து முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், விரைவில் நிரந்தர தீா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சா் உறுதியளித்ததாக திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments