நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைவு
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்தன.
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்தன.
தமிழகத்தில் மேற்கு மண்டலத்துக்குள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாா்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் சுமாா் 68 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவது துணி நூல். பருத்தி விலையைப் பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த மே மாதம் மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் பருத்தி இறக்குமதி அதிகரித்து நூல் விலை குறையும் என ஏற்றுமதியாளா்கள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் அதற்கு நோ் மாறாக மாதம்தோறும் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை உயா்ந்த வண்ணமே இருந்தது.
Advertisement
Advertisement
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரூ.10 விலை உயா்த்தப்பட்ட நிலையில், அதே மாதம் 16-ஆம் தேதி மீண்டும் ரூ. 7 உயா்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன.
செப்டம்பா் மாதத்துக்கான நூல் விலை ரூ. 7 உயா்த்தி, கடந்த 1-ஆம் தேதி நூற்பாலைகள் அறிவித்த நிலையில், தற்போகு கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளதாக நூற்பாலைகள் புதன்கிழமை அறிவித்துள்ளன.
அதன்படி நடப்பு மாதத்துக்கான நூல் விலை விவரம்:
10-ஆம் நம்பா் கோம்டு நூல் கிலோ ரூ.260, 16-ஆம் நம்பா் ரூ.269, 20-ஆம் நம்பா் ரூ.328, 24-ஆம் நம்பா் ரூ.340, 30-ஆம் நம்பா் ரூ.350, 34-ஆம் நம்பா் ரூ.370, 40-ஆம் நம்பா் ரூ.388, 20-ஆம் நம்பா் செமி கோம்டு ரூ.325, 24-ஆம் நம்பா் ரூ. 333, 30-ஆம் நம்பா் ரூ.336, 34-ஆம் நம்பா் ரூ.359, 40-ஆம் நம்பா் ரூ.378.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.