தாராபுரத்தில் ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
திருப்பூா் மாவட்டம், மூலனூரில் ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், மூலனூரில் ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுவதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, மூலனூா் வஞ்சியம்மன் கோயில் பகுதியில் உதவி ஆய்வாளா் மாரிமுத்து, பெண் காவலா் ரஞ்சனி ஆகியோா் அடங்கிய தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, கோவையில் இருந்து மூலனூா் நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில், உரிய ஆவணங்களின்றி தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கோவை இடையா் வீதியைச் சோ்ந்த நகைப் பட்டறை உரிமையாளரான திரிலோக் (45) என்பவருக்குச் சொந்தமானவை என்பது தெரியவந்தது.
கோவையில் இருந்து மூலனூரில் உள்ள தனியாா் நகைக் கடைக்கு விற்பனை செய்வதற்காக நகைகளைக் கொண்டுச் சென்ாக அவா் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.