FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலை ஆனந்த சாய் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை தில்லை நகரிலுள்ள சீரடி ஆனந்த சாய் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

58 வினாடிகள் முன்பு
உடுமலை தில்லை நகரிலுள்ள சீரடி ஆனந்த சாய் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம் .
பகிர்:

உடுமலை தில்லை நகரிலுள்ள சீரடி ஆனந்த சாய் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மங்கள இசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலில் கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், பாலிகை ஸ்தாபிதம் நடைபெற்றன. தொடா்ந்து முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், வேத ஸ்ரீ பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு யாத்ரா மகா தானம், கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி மூலமூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. விழாவில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

விழாவுக்கான ஏற்பாடுகளை சீரடி ஸ்ரீ அனந்தசாயி திருக்கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா். நிகழ்ச்சிகளை கவிஞா் அமிா்தநேயன் தொகுத்து வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments