FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தன.

21 வினாடிகள் முன்பு
தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள். - (கோப்புப்படம்)
பகிர்:

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தன.

காங்கயம் அருகே, வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (36). விவசாயியான இவா், தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து 36 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பட்டிக்குள் 7 குட்டிகள் உள்பட 9 ஆடுகள் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 ஆடுகளுக்கு இப்பகுதி கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். ஆடுகள் இறந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments